அண்டை மாநிலம் போல பனிப்பொழிவு குளிரில் நடுங்கும் அரியலூர் மாவட்டம்
கடந்த சில நாட்களாக அண்டை மாநிலங்களான கர்நாடக, கேரளா போன்ற மாநிலத்தில் பொழிவது போல அரியலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் கடும் பனி பொழிவு ஏற்பட்டுள்ளது வழக்கமாக மார்கழி மாதத்தோடு முடியும் பனிகாலம் இந்த முறை தையிலும் தொடர்வதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்
வாகன ஓட்டிகள் காலை எட்டுமணி வரை வாகனங்களை முகப்பு விளக்கு எரியவிட்டே வாகனத்தை ஒட்டமுடிகிறது என்கிறார்கள் கிராமங்களை பொருத்தவரை காலை பத்துமணி வரையும் பனியோடு கூடிய குளிர்காற்று வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதோடு துவரை முந்திரி உள்ளிட்ட பூ வைக்கும் பருவமுள்ள பயிர்கள் தொடர்ந்து பனி பொழிந்தால் பூ கருகி விளைச்சல் இல்லாது போகும் என கவலையடைந்துள்ளனர்
பருவநிலை மாற்றம் பூமி வெப்பமாதல் போன்ற காரணங்களால் இந்த பனிபொழிவு நீடிக்கிறது என்றும் நமது மாவட்டமக்களுக்கு இது புதிது என்பதால் சிரம்மாக தெரிவதாக விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்