அப்துல்கலாமின் 3 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 2000 பேர்கள் பங்கேற்ற அமைதி பேரணி
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் மூன்றாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு இராட்டின கிணறு மேம்பாலம் அருகே டாக்டர் அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் ஜெயராஜ் தலைமையில் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
செங்கல்பட்டு இராடினகிணறு பகுதியில் துவங்கிய இப்பேரணி வேதாசலம் நகர், புதிய பேருந்து நிலையம், மணிகுண்டு பழைய பேருந்து நிலையம் வழியாக தூய கொளம்பா பள்ளியில் நிறைவடைந்தது. இரபேரணியில் செங்கல்பட்டு அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி, பெண்கள் மேல்நிலைபள்ளி, மகரிஷி வித்தியாமந்தீர் பள்ளி, இந்திராகாந்தி பொறியியல் கல்லூரி, பட்டம்மாள் கலை அறிவியல் கல்லூரி உள்பட பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 2000 மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து, செங்கல்பட்டு கோட்டாட்சியர் முத்துவடிவேல், துணை காவல் கண்காணிப்பாளர் கந்தன், நகர ஆய்வாளர் சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று , நிகழ்ச்சியின் முடிவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தலை சிறந்த மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து கலாமின் கனவு மாணவன் என்ற விருதையும், மரக்கன்றுகளும் வழங்கினர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் குடிநீர் சேமிப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு, புகையிலை ஒழிப்பு, மின்சார சேமிப்பு, உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அமைதி பேரணியில் பங்கேற்றனர்.
Home / செய்திகள் / அப்துல்கலாமின் 3 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 2000 பேர்கள் பங்கேற்ற அமைதி பேரணி
Check Also
அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு …