அரசுக்கு கோவிட் கோரிக்கை ஜோதிமலை இறைபணி
திருக்கூட்டம் வலியுறுத்தல்.
கும்பகோணத்தில் செயல்படும் ஜோதிமலை இறைபணி திருக்கூட்ட
நிறுவனர் தவத்திரு.திருவடிக்குடில் சுவாமிகள் கோவிட் தடுப்பு மருந்து சம்பந்தமாக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பது :
இந்தியாவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து நடைமுறைக்கு கொண்டு வரும் முயற்சி துவங்கிவிட்டது நிம்மதி பெருமூச்சுடன் இருக்கிறோம். இறைவனுக்கு நன்றி. அரசுக்கும்,மருத்துவ ஆய்வு குழுவினருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.
முதல் கட்டமாக,சுமார் 5 லட்சத்து 36 ஆயிரம் டோஸ் “கோவிஷீல்டு” தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளதாக அறிகிறோம்.
முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு,
அவர்கள் தடுப்பூசி போட்டுக்
கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வருவது பாராட்டுக்குரியது.
இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு
ஒரு வேண்டுகோள்!
தமிழகத்தின் பல்வேறு
பகுதிகளிலும் குறிப்பாக சுற்றுலாத்தலங்கள்,புனிதத் தலங்கள், பேருந்து நிலையம்,ரயில் நிலையம், சத்திரங்கள்,கடைவீதிகள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் கேட்பாரற்ற, ஆதரவுக்கு யாருமில்லாத, கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் முதியவர்கள்,மாற்றுத்திறனாளிகள், நோய்வாய்ப்பட்டவர்கள்,மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என ஆயிரக்கணக்கானோரை நாம் காண முடிகிறது.
இவர்களுக்கென்று எந்த விதமான மருத்துவ உதவியும்,குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளும் உறுதி செய்யப்படாத நிலை உள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில்,இவர்கள் மூலமாகவும் நோய் பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே,
முன்களப் பணியாளர்களையடுத்து இவர்களைப் போன்றவர்களை மாவட்ட வாரியாக அடையாளம் கண்டு “கோவிஷீல்டு”தடுப்பூசி போடப்பட்டு
இவர்களை மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருவது பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் மிக முக்கியமானதாகும் என்பதுடன்,மனிதநேய அடிப்படையில் இவர்கள் மீது தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். என்று தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார் அரசு பரிசீலிக்குமா ?