அரசு பள்ளியில் சேர ஊக்கதொகை அளிக்கும் பெற்றோர் ஆசிரியர்கழகம்
பேராவூரணி ஒன்றியத்தில் அமைந்துள்ள பெரியதெற்குக்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் பயில சேரும் மாணவ மாணவிகளின் பெற்றோருக்கு ஊக்கத்தொகையாக ஆயிரம் வழங்கி அசத்தி உள்ளனர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்
அரசுப்பள்ளியில் மாணவர்களை சேருவதை ஊக்குவிக்கும் விதமாக கிராமத்தினர், ஆசிரியர்கள் பங்களிப்போடு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சேரும் மாணவர்களின் பெற்றோருக்கு தலா ரூ 1000 வழங்கலாம் என பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன் படி திங்கள் அன்று பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த 2 பேர், 6 ஆம் வகுப்பில் சேர்ந்த 3 பேர் ஆக 5 பேரின் பெற்றோருக்கு தலா ரூ 1000 வீதம் ஊக்கப்பரிசாக ரூ 5 ஆயிரம் கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வேலம்மாள், பெற்றோர் ஆசிரியர் தலைவர் முருகேசன், அன்னையர் குழு உறுப்பினர் ஜெயா, பள்ளி ஆசிரியர்கள் ஜெயந்தி,ரஞ்சிதா, குளோரி மற்றும் சிவலிங்கம், அம்பிகாபதி, முத்துவேல், மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த புதிய திட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது