அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மணப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஏரி, குளங்கள் பாதுகாப்பு வலியுறுத்தி, மழைத்துளி நம் உயிர்த்துளி, நீர்நிலைகளை பாதுகாப்போம் போன்ற தலைப்புகளில் விழிப்புணர்வு பாடல்கள் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் அ. மதலைராஜ் , சாட்டை திரைப்பட இயக்குனர் எம்.அன்பழகன் , தண்ணீர் அமைப்பு கே.சி.நீலமேகம், கலைக்காவிரி பேராசிரியர் கி.சதீஷ்குமரன் ,
சமூகஆர்வலர்கள் ரமேசுகருப்பையா, திருச்சி தி.மா.தமிழழகன், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மா.அண்ணாமலை மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவமாணவிகள் ஆரவாரத்திற்கிடையே பாடல் ஒலிபரப்பப்பட்டது.
முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் த.சிவமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். நிறைவாக, மழைத்துளி நம் உயிர்த்துளி பாடலாசிரியர் எம்.எஸ்.மதுக்குமார் நன்றியுரையாற்றினார்.
பாடலாசிரியர் அரியலூர் மாவட்ட சிறப்பு குறித்தும், நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு குறித்தும் 2 பாடல் குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளார்.