அரியலூரில் இயற்கை ஆர்வலருக்கு மரியாதை செலுத்திய பின்பு படம் பார்த்த காலா ரசிகர்கள்.
உலகம் முழுவதும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் இன்று வெளியானது.இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் காலா திரைப்படம் அரியலூர்,ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களில் உள்ள திரையரங்குகளில் வெளியானது அரியலூரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் இந்த மாவட்டத்தில் உள்ள கல்லூர் கிராமம் இயற்கை ஆர்வலர் முதியவர் கருப்பையாவை மாலை மரியாதையோடு வரவேற்று சால்வை அணிவித்து அவரோடு படம் பார்க்க சென்றனர்
இயற்கை ஆர்வலர் பெரியவர் கருப்பையா தமிழகம் முழுவதும் நடைபயணமாக சென்று தனது கையால் விதையிடப்பட்டு வளர்த்த செடிகளை காணும் இடங்களில் எல்லாம் வளர்த்து வருபவர்.கடந்த 40 ஆண்டுகளாக சுமார் 3லட்சம் மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் நட்டுள்ளார்.இதற்காக யாரிடமும் ஒரு பைசாகூட பெற்றுக்கொண்டதில்லை.இத்தகைய பெருமை வாய்ந்த இயற்கை ஆர்வலர் கருப்பையா அவர்களை அரியலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் சார்பாகவும்,அரியலூர் மகாசக்தி திரையரங்க நிர்வாகத்தின் சார்பாகவும் கௌரவபடுத்தியது அரசியல் தாண்டி பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.