அரியலூரில் காவிரி உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டம்
.
காவிரி உரிமை மீட்பு பயணத்தின் 2-வது அரியலூரில் குழு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் தொடங்கியது. பயணத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தொடங்கிவைத்தார்.
இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:
காவிரியில் நாம் கேட்ட அளவிற்க்கு தண்ணீர் கிடைக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பில் மிகவும் குறைத்து வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு எதிர்பார்ப்பதை நீதி மன்றம் தருகிறது. மத்திய அரசை நீதிமன்றம் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் அது போல் நடக்க வாய்ப்பில்லை. தற்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு மேலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கவே வாய்ப்பாக அமையும்.
உச்சநீதிமன்றம் மே 3-ம் தேதிக்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்க வேண்டும். ஆனால் அது போல் நீதிமன்றம் சொல்லவில்லை, வரைவு அறிக்கை திருத்தத்திற்க்கும் விவாதத்திற்க்கும் வழிவகுக்கும்
தமிழகத்தில் அனைவரும் ஒத்த கூரல் எழுப்ப வேண்டும். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பிரதமரை சந்திக்க தமிழகத்தில் இருந்து யாரும் கடிதம் தரவில்லை என கூறியுள்ளார். இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லபோகிறார்.
மோடி அரசின் தமிழர் விரோத போக்கை அம்பலப்படுத்தவே இந்த மீட்பு பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் முழுவெற்றி பெற்றது. மோலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடங்கும் என கூறினார்.
நிகழ்ச்சியில், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயளாலர் பாலகிருஷ்ணன், தி.மு.க. மாநில கொள்கை பரப்பு செயளாலர் ஆ.ராசா, மாநில துணைப் பொது செயளாலர் ஐ.பெரியசாமி, மாநில துணைப் பொது செயளாலர் வி.பி.துரைசாமி, முஸ்லீம் லீக் மாநில பொதுச்செயலாளர் ஷாஜகான் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ் .எஸ் சிவசங்கர் உள்ளிட்ட திமுக மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சியினர் பங்கேற்கும் காவிரி உரிமை மீட்பு பயணம் கடந்த 7-ம் தேதி திருச்சி அடுத்த முக்கொம்பில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
antivert cost meclizinex.com
cheap antivert 25 mg http://www.meclizinex.com/# cheap antivert 25mg