அரியலூரில் கொரானா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை
நடவடிக்கை.
உலகை அச்சுறுத்தும் உயிர்கொல்லியான கொரானா தொற்று பரவாமல் இருக்க உலகநாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன அதன் அடிப்படையில் தமிழக சுகாதாரத்துறையும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அரியலூர் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல் படி மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலைய வளாகம் , கடைவீதி மற்றும் உணவக வளாகம் போன்ற இடங்களில் நகராட்சி ஆணையர் குமரன் தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துமுகமது ,வட்டார சுகாதார ஆய்வாளர் தர்மலிங்கம் ,மருத்துவர் சாரா மேற்பார்வையாளர் ஸ்மித்சைமன் , நகர்புற சுகாதார ஆய்வாளர் வகீல் மற்றும் அருள் ப்ரியன் உள்ளிட்ட குழுவினர் நோய் தொற்று கிருமிநாசினி தெளிக்கும் பணியினை மேற்கொண்டதோடு கொரானா தொற்று பரவாமல் தடுக்க என்னென்ன முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்களுக்கு நலக்கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளர்களும் கலந்துகொண்டனர்.