அரியலூரில் தூத்துகுடி சம்பவத்தை கண்டித்து தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்பாட்டம்
கடந்த வாரம் தூத்துகுடியில் நடந்த தூப்பாக்கி சூட்டு சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் உயிரிழந்ததை கண்டித்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும்
தே.மு.தி.க சார்பில் அரியலூரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது ஆர்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் இராம.ஜெயவேல் தலைமை தாங்கினார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்பாட்டத்தில் தமிழக அரசுக்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.