அரியலூரில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் துணிகர திருட்டு.
அரியலூரில் உள்ள லெஷ்மி தியேட்டர் பின்புறம் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் முதல் தளத்தில் குமுதா என்பவர் தனது கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் இரண்டு குழந்தைகளோடு தனியாக வசித்து வருகிறார்
நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு அருகேயுள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார் இந்நிலையில் மர்ம மனிதர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பிரோவில் வைத்திருந்த 10 சவரன் நகை மற்றும் 30 ஆயிரம் பணம் திருடி சென்றுள்ளனர்
கொள்ளையர்கள் மாட்டி கொள்ளாமல் இருக்க அருகில் இருந்த வீடுகளின் கதவை வெளிதாப்பால் போட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து அளித்த புகாரின் அடிப்படையில் அரியலூர் போலீசார் விசாரணைமேற்கொண்டுவருவதோடு மோப்பநாயையும் வைத்து துப்பறிந்து வருகின்றனர் குடியிருப்பு பகுதியில் நடந்த திருட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..