அரியலூரில் மத்தியஸ்தம் மற்றும் சமரச மையம் தொடக்கம்
அரியலூரில் மத்தியஸ்தம் மற்றும் சமரச மையத்தை மாவட்ட ஆட்சியர் எம்.விஜயலட்சுமி முன்னிலையில் முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி டி.சுமதி மையத்தை திறந்து வைத்து பேசினார் அப்போது அவர் கூறியது
இந்த மையத்தின் முக்கிய பணிகள் அனைத்து நீதிமன்றங்களிலும் நீண்ட நாள் நிலுவையில் உள்ள சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை கண்டறிந்து, விரைந்து தீர்த்து வைக்கப்படவுள்ளது. இந்த சமரச மையத்திற்காக சிறப்பு பயிற்சி பெற்று வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் இந்த சமரச மையத்தை பயன்படுத்தி தங்களது வழக்கு நீண்ட நாட்கள் நிலுவைகள் இருப்பின் விரைந்து முடித்துக்கொள்ளலாம் என்றார்.
தொடர்ந்து, அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனத்தின் மூலம் சமரச மையம் தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்கள் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காண்பிக்கப்பட்டது.
.இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி., அபிநவ்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் மகாலெட்சுமி, கூடுதல் மாவட்ட நீதிபதி கே.ஜெயக்குமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.ரவி, வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் எஸ்.ஜெயக்குமார், அசோசியேசன் தலைவர் வி.செல்வராஜ், மத்தியஸ்தம் மற்றும் சமரச மைய உறுப்பினர் ஆர்.செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
.