அரியலூர் அருகே இருசக்ர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் 2 பேர்பலி ஒருவர் படுகாயம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள ஏலாக்குறிச்சி பிரிவு சாலையில் இன்று காலை அதிவேகமாக வந்த இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில்
ஏலாக்குறிச்சிநில் செயல்படும் தனியார் மருத்துவமனை மேலாளர் கல்லக்குடி (டால்மியா) ஞானபிரகாசமும் வாழைக்குழி கி்ராமத்தை சேர்ந்த தனபால் ஆகிய இருவரும் சம்பவயிடத்திலேயே பலியாகினர்.
வாகனத்தில் பயணம் செய்த தனபாலின் மனைவி பானுமதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த விபத்து குறித்து திருமானூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.