அரியலூர் அருகே மணல் கடத்திய இருவர் கைது வாகனம் பறிமுதல்
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கோவில்எசனை பகுதியில் வெங்கனூர் போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியே வந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனை செய்தபோது கொள்ளிடம் ஆற்றிலிருந்து கள்ளத்தனமாக மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லோடு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸார் ஆட்டோவை ஓட்டிவந்த க.மேட்டுத்தெருவை சேர்ந்த பாரதி உடன் வந்த க.மேட்டுத்தெருவை சேர்ந்த கார்த்திஆகிய 2 போரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றில் அரசு குவாரி செயல் படவே நீதி மன்ற இடைக்கால தடை உத்திரவு உள்ள நிலையில் மணல் திருட்டில் இருவர் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
3 comments
Pingback: look what i found
Pingback: 코인커뮤니티
Pingback: unicc shop