அரியலூர் மாவட்டத்தில் குருத்தோலை ஞாயிறு நாளையொட்டி நடைபெற்ற ஊர்வலம் மற்றும் திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இயேசு கிறிஸ்துவை யூதர்களின் ராஜாவாக அறிவித்துஇ ஜெருசலேம் நகருக்குள் குருத்தோலைகளுடன் ஊர்வலமாக அழைத்துச்சென்ற தினத்தை குருத்தோலை ஞாயிறாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றன. முன்னதாக குருத்தோலைகளுடன் கிறிஸ்தவர்கள் ஓசானா பாடல்களை பாடி ஊர்வலமாகச் சென்றனர்.
அரியலூரிலுள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தின் கத்தோலிக்க திருச்சபை மற்றும் சி.எஸ்.ஐ ஆலயத்தின் தென்னிந்திய திருச்சபை ஆகியவற்றின் சார்பில் குருத்தோலை பவனி நிகழ்ச்சி நடந்தது. திருச்சபைகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அரியலூர் அண்ணா சிலை கூடி ஊர்வலமாக புறப்பட்டனர்
கிறிஸ்தவர்கள் புனித குருத்தோலைகளை கையில் பிடித்து புறப்பட்டனர். புதுமார்க்கெட் வீதி வழியாக சத்திரம் திருச்சி பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அரியலூர் மாதாகோவிலில் நிறைவடைந்தது.
தென்னிந்திய திருச்சபையை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக புது மார்க்கெட் வீதியிலுள்ள சி.எஸ்.ஐ ஆலயத்திற்கு வந்தனர். குருத்தோலை பவனியின் போது ”தாவீதின் மகனுக்கு ஓசான்னா” கிறிஸ்தவ பாடல்களை பாடி ஏசுவின் கிறிஸ் துவின் நினைவு கூர்ந்தனர்.
வரதாராஜன்பேட்டை முக்கிய வீதிகளில் கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியாவாறே ஓசான்னா கீதத்தை முழங்கியபடி ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து புனித அலங்கார அன்னை ஆலயத்தில் குருத்து ஞாயிறையொட்டி பங்கு தந்தை வின்சென்ட்ரோச் மாணிக்கம் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.
தென்னூர் அன்னை லூர்து ஆலயம் ஆண்டிமடம் புனித மார்ட்டினார் ஆலயம் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை தேவாலயம் உள்ளிட்ட அரியலூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு குருத்தோலை பவன நிகழ்ச்சி நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவர் கலந்து கொண்டு வழிபட்டனர்.