அரியலூர் கோதண்ட ராமசாமி திருக்கோயிலில் இந்து அறநிலையத் துறை சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா போட்டிகள் நடைப்பெற்றது.
அரியலூர் கோதண்டராமசாமி திருக்கோயிலில் இந்து அறநிலைய துறை சார்பில் வள்ளலார் முப்பெரும் விழாவை முன்னிட்டு நேற்று நவம்பர் 1 ந்தேதி செவ்வாய் கிழமை பள்ளி மாணவ, மாணவியர்களிடையே பல்வேறு வள்ளலார் வாழ்வியல் குறித்து பேச்சு போட்டி , கட்டுரைப்போட்டி , ஓவிய போட்டி மற்றும் பாடல் போட்டிகள் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட இணை ஆணையர் சி.ஜோதி தலைமையில் நடைப்பெற்ற இப்போட்டியில் 26 பள்ளிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு வரும் நவம்பர் 6 ஆம் தேதி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் விழாவில் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் உதவி ஆணையர் என்.நாகராஜ், கோயில் செயல் அலுவலர் எஸ்.சரவணன் மற்றும் வடலூர் வள்ளலார் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.