அரியலூர் மாவட்டம் இலங்கைசேரிகிராமத்தை சேர்ந்த இளஞ்செழியன் மகன் செல்வமுருகன் (29) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் தனது கிராமத்திலிருந்து அரியலூர் நோக்கி சென்றுகொண்டிருந்த போது பொய்யாதநல்லூர் நாலந்தபள்ளி அருகில் எதிரேஅதிவேகமாக வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே செல்வமுருகன் உயிரிழந்தார். இவர் கடந்த ஒராண்டாக வெளிநாட்டில் இருந்து வந்து விவசாய பணியை மேற்கொண்டுவந்தார். செல்வமுருகனுக்கு மனைவியும், குழந்தையும் உள்ளனர். இச்சம்பவம் அ செந்துறை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த செந்துறை போலீசார் தப்பியோடிய லாரி ஒட்டுனரை தேடி வருகின்றனர்..
Check Also
அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு …