அரியலூர் சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம், சூலக்கரை கிராமம் மாரியப்பன் மகன் துரைபாண்டி திருப்பூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவரிடம் கார் ஓட்டுநராக இருந்து வந்தார் , அதே மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக இருந்த அரியலூர் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை,திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி பாலியலில்
ஈடுபட்டுள்ளார்
இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து சிறுமியை மீட்டு வந்தனர் .குற்றவாளியான துரைபாண்டியை கடந்த 17 ஆம் தேதி கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். துரைப்பாண்டி சிறையில் இ ருந்து வரும் நிலையில் வழக்கிலிருந்து தப்பிவிட கூடாது என்பதா ல் பாலியல் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டார். இதையடுத்து,ஆட்சியரின் நகலை ஆண்டிடம் காவல் துறையினர் திருச்சி சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் .