அரியலூர் பெரம்பலூர் மாவட்ட காவலர்கள் ரத்த தானம்
அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் ஆயுதபடை அலுவலகத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ்குமார் தொடக்கி வைத்தார். முகாமில் அரியலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ் உட்பட 60 காவலர்கள் ரத்ததானம் செய்தனர்.
நிகழ்ச்சியில் சுகாதார துறை துணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி, அரியலூர் தலைமை மருத்துவமணை மருத்துவர் ரமேஷ் டாக்டர் அறிவுசெல்வன் மற்றும் அரசு மருத்துவமணை ரத்த பிரிவு ஊழியர்கள் ரத்தம் சேகரித்தனர்.இதேபோல்
பெரம்பலூர் தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமை, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல் தொடக்கி வைத்து பார்வையிட்டார். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த பிரிவு மருத்துவர் சரவணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 57 காவலர்களிடம் ரத்தம் சேகரித்தனர்.
நிகழ்ச்சியில், கூடுதல் கண்காணிப்பாளர் தங்கவேல், துணை கண்காணிப்பாளர்கள் ரவீந்திரன், குமரவேல், ஊர்க்காவல் படை மண்டல தளபதி ஜே.அரவிந்தன், ஆய்வாளர்கள் வனிதா, ஸ்ரீதர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
.