அரியலூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையான ஒருங்கிணைந்த நீதிமன்றம் கேட்டு வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்
அரியலூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையான ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வழங்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெயக்குமார் தலைமையில் அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் கடந்த காலத்தில் அரியலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வேண்டி மனு அளித்திருந்தனர்
தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாக வில்லை இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதே போல் மாவட்ட ஆட்சியார் அலுவலகம் முன்பு கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வழங்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததோடு மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்தனர் .