அரியலூர் மாவட்டத்தில் அம்மா ஸ்கூட்டர் திட்டம் 102 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது அரசு தலைமை கொறடா துவக்கி வைத்தார்
.
இந்நிகழ்ச்சி அரியலூர் மாவட்டஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை ஏற்க சிதம்பரம் தொகுதி நாடாளமன்ற உறுப்பினர் , மா.சந்திரகாசி, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ., ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்க
அம்மா ஸ்கூட்டர் திட்ட பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் வழங்கினார்
பின்னர் விழாவில் அவர் பேசியது பெண்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியாக கொண்டு எண்ணற்ற பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்திவருவதோடு மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன்கள், புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல் போன்று பெண்கள் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு இருந்து வருகிறது.
தமிழகத்தில் உழைக்கும் பெண்கள் பணியிடங்களுக்கும், பிறவேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் 2017-18-ம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படஉள்ளது. பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடக்கிவைத்த இத்திட்டத்தில் .
இரு சக்கரவாகனங்கள் 50 சதவீத மானியமாக ரூ.25,000- அல்லது வண்டியின் விலையில் பாதி இவற்றில் எதுகுறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. வாகனங்கள் சொந்தநிதியிலிருந்தும், வங்கிகடன் மூலகமாகவும் வாங்கலாம்.
அரியலூர் மாவட்டத்திற்கு ஊரகபகுதிகள் 967 பயனாளிகளுக்கும் மற்றும் நகர்ப்புறபகுதிகள் 121 பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 1088 பயனாளிகளுக்கு அரியலூர் மாவட்டத்தில் மட்டும் வழங்கப்பட உள்ளது என கூறினார்
விழாவில், மாவட்டவருவாய் அலுவலர் சே.தனசேகரன், திட்ட இயக்குநர் ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கே.லோகேஸ்வரி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
.