அரியலூர் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் பீதியால் அடிவாங்கும் அப்பாவிகள்
அரியலூா் மாவட்டத்தில் சமீபகாலமாக குழந்தை கடத்தல் அங்கு நடக்கிறது இங்கு நடக்கிறது என மாவட்டத்தில் உள்ள கிராமங்களை மையப்படுத்தி வரும் வதந்தியால் பொற்றோர்கள் பொது மக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.
இந்நிலையில் அரியலூா் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கோட்டைகாடு கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகே ஒரு பெண்மணி குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதையே பார்த்து கொண்டிருப்பதை பார்த்த கிராம மக்கள் அந்த பெண்மணி குழந்தை கடத்த வந்ததாக நினைத்து விசாரித்த போது முன்னுக்கு பின் மாறி மாறி பேசியுள்ளார். இதனையடுத்து அவரை தாக்கியதோடு தளவாய் போலீசாருக்கு தகவல் கொடுத்தனா்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவா் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என தெரியவந்தது மனநலம் பாதித்த பெண்ணை போலீசார் விருத்தாசலம் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனா்.
அரியலூர் மாவட்டத்தில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பதோடு வதந்தி பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.