அரியலூர் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது
அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், விவசாய பணிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2 ம் தேதி முதல் தொடங்கிய மழை ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், தா.பழூர், மீன்சுருட்டி, திருமானூர், செந்துறை,ஆண்டிமடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விட்டு விட்டு பெய்து வருவதால், விவசாய பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தொடர் மழையால் ஏரி மற்றும் குளங்களில் தண்ணீர் கணிசமாக உயர்ந்து வருகிறது.