mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கான வேளாண்மை துறை அறிவிப்பு

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கான வேளாண்மை துறை அறிவிப்பு

நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் மானியத்தில் பிரதம மந்திரி நீர்பாசனத் திட்டம்

அரியலூர் மாவட்டத்தில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் பிரதம மந்திரி நீர் பாசனத் திட்ட பணிகள் மானியத்தில் செயல்பட உள்ளது

குறைந்த நீர் செலவில் விவசாயம் மேம்படும் விதமாக குழாய் கிணறு அமைத்தல் 50 சதவீதம் அதிக பட்சம் ரூ.25,000 மானியம், ஆயில் எஞ்சின் மின் மோட்டார் 50 சதவீத அதிக பட்சம் மானியம் ரூ.15,000 , நீர் பாசன குழாய் அமைத்தல் எக்டருக்கு 50 சதவீத மானியம் ரூ.10,000, நீர் சேமிப்பு தொட்டி அமைத்தல் 50 சதவீத மானியம் அதிக பட்சம் ரூ.40,000 என பணிகள் மானியத்துடன் செயல்பட உள்ளது.

இதற்கான களப்பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் திட்ட விழிப்புணர்வு முகாம் அரியலூர், தா.பழூர், ஆண்டிமடம் மற்றும் செந்துறை வட்டாரங்களில் மாவட்ட ஆட்சியர் எம்.விஜயலட்சுமி அறிவுறுத்தலின் படி, வேளாண் துணை இயக்குநர் ஜி.ஆர்.முருகன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

எனவே, விவசாயிகள் மேற்கண்ட மானியங்களை பெற மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அலுவலகத்தை அணுகி பயன் பெற வேண்டும் என வேளாண்மைத்துறை அலுவலகம் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About ThagavalAdmin@123

Check Also

சமையல் ஈஸி : மனம் விரும்பும் நொறுக்கு மரவள்ளி சிப்ஸ்.

சமையல் ஈஸி : மனம் விரும்பும் நொறுக்கு மரவள்ளி சிப்ஸ். தேவையான பொருட்கள் 1. மரவள்ளி கிழங்கு 1/2 கிலோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *