அரியலூர் வலுக்கும் போராட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கேட்டு வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்.
மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் ஒருங்கிணைத்த நீதிமன்ற கட்டிடம் இதுவரை அமைக்கப்படவில்லை.
ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்ட வலியுறுத்தி அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து உள்ளனர்.
இதேகோரிக்கையை வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை முதல் நீதிமன்றம் முன்பு ஆர்பாட்டமும் திங்கள் அன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டமும. கோரிக்கை மனுவும் கொடுத்தனர் இதன் தொடர்ச்சியாக இன்றும் நீதிமன்றத்தை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்