அஸ்தினாபுரம் பள்ளியில் மாணவர்களுக்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு பொது சுகாதாரதுறை சார்பில் வழங்கப்பட்டது.மேலும் தன் சுத்தம் குறித்து போதிக்கப்பட்டதோடு மாணவக் குழு அமைத்து தினசரி பள்ளி வளாகத்தில் கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ள தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது பினனர் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்களோடு டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கா.வகீல், சுகாதார ஆய்வாளர்கள் ப.செல்வராஜ், ரா.ராஜேஸ்வரி, இ.ஜெகதீஸ்குமார் ஆகியோருடன் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள், கலந்துகொண்டனர்