ஆடி கடைவெள்ளியில் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
ஆடி கடைவெள்ளியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடும், பால்குடத்திருவிழாவும் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் செந்துறை திருமானூர், தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், உடையார்பாளையம் உள்ளிட்ட நகர மற்றும் கிராம பகுதிகளில் அமைந்துள்ள மாரியம்மன், செல்லியம்மன், பெரியநாயகி அம்மன், காளியம்மன் கோயில்களுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் செய்து பொங்கல் படையலிட்டு வழிபட்டனர் அத்தோடு பக்தர்கள் குலதெய்வ மற்றும் சிவன்கோவில் பெருமாள்கோவில் வழிபாட்டிலும் ஈடுபட்டனர் .