mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / ஆட்டோ ஓட்டுனர் கொலையில் நால்வர் சரண்

ஆட்டோ ஓட்டுனர் கொலையில் நால்வர் சரண்

ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் நால்வர்
நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

திருச்சி உறையூர் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் அரியலூர் நீதிமன்றத்தில் 4 பேர் நேற்று சரணடைந்தனர்.
திருச்சி உறையூர் பணிக்கன் தெருவைச் சேர்ந்த செம்புராஜ் மகன் துரைராஜ் ஆட்டோ ஓட்டுநரான இவர், ரியல் எஸ்டேட் புரோக்கராகவும் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 18 ம் தேதி காலை 6 மணிக்கு சவாரி செல்வதாகக் கூறி, வீட்டிலிருந்து புறப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே, 19 ம் தேதி காலை உய்யக்கொண்டான் திருமலை ஆதிநகர் பகுதியிலுள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலுக்கு அருகே ஒரு ஆட்டோ நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. அது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் உறையூர் போலீஸார் ஆட்டோவின் பின்புற இருக்கைக்கு பின்னால் துரைராஜ் கொலை செய்யப்பட்டு மூட்டையாக கட்டப்பட்டு கிடந்தார். மேலும், அவர் உடல் முழுவதும் 13 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
அதிர்ச்சியடைந்த போலீஸார் துரைராஜ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் துரைராஜை கொலை செய்ததாக கூறி உறையூர் பாண்டமங்கலம் சிவசங்கர் மகன் சதீஷ் சுப்பிரமணியன் மகன் அப்பு(எ)சரவணன் போதாவூர் பாலமுத்து மகன் தனபால் திருவெறும்பூர் மலைக்கோவில் துரைராஜ் மகன் சுரேஷ் ஆகிய நால்வரும் அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதியிடம் சரணடைந்தனர். இதையடுத்து அவர்களை 15 நாள்கள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

About ThagavalAdmin@123

Check Also

பொறுப்புள்ள பொறியாளர் இவருங்க என நம்மை கடந்து சென்ற ஒரு இளைஞரை கை காட்டினார்கள் அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பெரியவர்கள்.

பொறுப்புள்ள பொறியாளர் இவருங்க என நம்மை கடந்து சென்ற ஒரு இளைஞரை கை காட்டினார்கள் அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பெரியவர்கள். பெரம்பலூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *