ஆர்.எஸ்.மாத்தூர் அருகே உள்ள மதுபானகடையை அகற்ற பொதுமக்கள் மனு.
செந்துறை வட்டத்திற்க்கு உட்பட்ட ஆர்.எஸ்.மாத்தூர் அருகேயுள்ள பூமுடையான் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று குறை தீர்ப்பு முகாமில் மனு ஒன்று அளித்தனர் அதில் பூமுடையான் குடிகாடு கிராம எல்லையில் இயங்கி வரும் அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் இந்த கடையால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மதுபான கடையை மூட விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஊர் பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்வதாக அம் மனுவில் குறிப்பிடபட்டுள்ளது.