mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / ஆர்.எஸ் மாத்தூர் அருகே தனியார் சிமெண்ட் ஆலையை கண்டித்து கிராம்மக்கள் ஆர்பாட்டம்

ஆர்.எஸ் மாத்தூர் அருகே தனியார் சிமெண்ட் ஆலையை கண்டித்து கிராம்மக்கள் ஆர்பாட்டம்

ஆர்.எஸ் மாத்தூர் அருகே
தனியார் சிமென்ட் ஆலையை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
தனியார் சிமென்ட் ஆலை நிர்வாகத்தை கண்டித்து அரியலூர் மாவட்டம் தாமரைப்பூண்டி கிராமத்தில் சோழன்பட்டி கிராம மக்களும் சுரங்கப் பகுதி மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாமரைப்பூண்டி கிராமத்தில் முன்பு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீறி, தாமரைப்பூண்டி,சோழன்பட்டி சாலையை ஆலத்தியூரில் இயங்கும் தனியார் சிமென்ட் ஆலை நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதை கண்டித்தும், சுரங்க விதிப்படி சுரங்கத்தை சுற்றி 33 சதவீதம் பசுமைப் பகுதியை ஏற்படுத்த வேண்டும். காலாவதியான சுரங்கத்தை மூட வேண்டும்.சுரங்கத்தில் அதிகப்படியான கனிமங்களை தோண்டக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சமூக ஆர்வலர்கள் அருள்மொழிவர்மன், தங்க.சண்முகசுந்தரம், விவசாயிகள் ராசாங்கம், வைத்தியலிங்கம், நீலமேகம்,கணேசன் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

About ThagavalAdmin@123

Check Also

வானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா?

வானிலையை வசப்படுத்தி வைத்திருக்க முடியுமா? முடியும் என கால் நூற்றாண்டுக்கும் மேலாக நிரூபித்துக்கொண்டிருக்கிறார் வேதாரண்யம் அருகேயுள்ள தன்னார்வலர் ஆசிரியர் செல்வகுமார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *