mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / இது தான் வாழ்க்கையென நினைத்திருக்கையில் சிலரை விதி அப்படியே புரட்டி போட்டுவிடும். அவரா ?

இது தான் வாழ்க்கையென நினைத்திருக்கையில் சிலரை விதி அப்படியே புரட்டி போட்டுவிடும். அவரா ?

இது தான் வாழ்க்கையென நினைத்திருக்கையில் சிலரை விதி அப்படியே புரட்டி போட்டுவிடும். அவரா ? இவரு…..என ஆச்சர்யபடவைக்கும். இப்படி பல திசையில் பயணித்து கடந்த இருபது ஆண்டாக வள்ளலார் வழியில் ஆன்மீகமும், பாரம்பரியமுறையில் வைத்தியமும் பார்த்து வரும் வரதராசன் அவர்களை சந்தித்தோம்.

சென்னை நண்பரோடு உரையாடிக்கொண்டிருந்தவர் நம்மை கண்டு வரவேற்றார். 63 வயதை தொட்ட அவரிடம் இருந்து அருவி போல வந்து விழுகிறது வார்த்தைகள்.

உங்களை பற்றி சொல்லுங்களேன் என்றோம்

கடலூர் மாவட்டம் இராமநாத்தம் அருகே உள்ள பெரங்கியம் கிராமம் தான் பூர்வீகம் சின்ன பிள்ளையிலே மூளைக்காய்சல் பாதிப்பாகி செத்து போவேனு சொன்னாங்க வைத்தியம் பண்ணி பொழைச்சிகிட்டேன் பிறகு மலஜலம் கழிக்கிறதுல தொடர்ந்து தொல்லை இப்படியே 28 வயசாகி போச்சு இதுக்கு இடையிலே வைத்தியம் வைத்தியமுன்னு பார்த்து சலிச்சிப்போச்சு ஒரு கட்டத்துல மல ஜல அவதி தாங்காம தழை தாம்புன்னு மனசுல பட்டதையெல்லாம் தின்ன ஆரம்பிச்சேன். ஒரளவு கட்டுக்குள்ள வந்தது இது எப்படி ? சாத்தியமாச்சின்னு யோசிக்க யோசிக்க பாரம்பரிய வைத்திய முறைகள் பக்கம் கவனம் போச்சி அது சம்பந்தமான புத்தகங்கள் மூலிகைகள் தேட ஆரம்பித்தேன். அப்புறம் நண்பர்கள், உறவினர் ஊர்காரவங்க இப்ப வெளியூர்காரவங்கன்னு வைத்தியம் பார்ப்பது வளர்ந்திருக்கு என்றார்.

நீங்க பகுத்தறிவுவாதின்னு கேள்விப்பட்டேன் வள்ளலார் எப்படி ? என்றால்

தம்பி நான் வைத்திய புத்தகம் படிக்க படிக்க உடலியல், நாடி சாஸ்திரம் இரண்டும் தான் நமக்கு பிரதானம் என தோன்றியதால் யோக, தியானம் செய்ய ஆரம்பிச்சேன் பாருங்க அப்பத்தான் இறைவன் ஒருவன் இருக்கான் என்று உணர்ந்தேன். பகுத்தறிவு கொள்கையுடைய நான் தானாக ஓங்காரம் சொல்ல பழகினேன். வள்ளலார் வழி சிறந்த வழி என்பதை பரிபூரணமாய் உணர்ந்து. அவரது பெயரில் தியானம், வைத்தியம் கற்று தருகிறேன் என்னும் வரதராசன்.

சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண்களை அவசரகால கை வைத்தியம் செய்துகொள்ளவும் நாடி அறிந்து நடந்து கொள்ளவும் பழக்கியுள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் இருந்து இவரிடம் வந்து நாடி சாஸ்திரம் கற்று செல்லும் மாணவ மாணவியர்கள் உண்டு இவரும் கல்லூரிகளுக்கு சென்று பாரம்பரிய வைத்திய முறைகள் பற்றிய பாடம் எடுப்பதையும் வழக்கமாய் கொண்டுள்ளார்.

தமிழ்வைத்திய முறைகளை பெரிதும் மதிக்கும் வரதராசன் உதவிக்கு தனது மகன் லெலினை வைத்துள்ளார் இவர் தயாரிக்கும் மூலிகை கூந்தல்தைலம், மூட்டுவலி தைலத்திற்க்கு வாடிக்கையாளர்கள் நிறைய, நிறைய.

ஆண்டு தோறும் கொரக்கை நத்தம் கிராமத்தில் சிவராத்திரியன்று பாரம்பரிய வைத்தியமுறைகளின் பலன்களை சொற்பொழிவாக நிகழ்த்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அவரிடம் இளைய தலைமுறைக்கு உங்க ஆலோசனை என்ன ? என கேட்டோம்.

இன்றைய தலைமுறை உடலை கோவிலாக பேணவேண்டும் யோக, தியானம் அவசியம் பயிலவேண்டும் இடகலை,பிங்கலை, சுழிமுனை என நாடி ஓட்டங்கள் நல்லமுறையில் இயங்க நோய்நொடி அண்டாது. தேவையற்ற பழக்கங்கள் ஏற்படாது ஓம் என சொல்ல சொல்ல நோய்விட்டு போகும் இதையாவது பழக்க வேண்டும் என விடைகொடுத்தார்.

வெளியே வந்தபோது தம்பி…. தம்பி …..என குரல் கொடுத்தார் திரும்பி சென்றோம்.

ஏதாவது கடைக்கு வாங்க போனா அவசியம் துணிபை எடுத்து போங்க என்ற படியே வள்ளலார் படம் அச்சிட்ட துணிப்பையை கொடுத்தார். உடலியல் பற்றி முன்பு விழிப்புணர்வு பிரசுரம் ஆயிரக்கணக்கில் அடித்து விநியோகித்தவர் தற்போது நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி துணிப்பை இயக்கத்தோடு இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் என்ற கூடுதல் தகவலறிந்து மகிழ்வோடு நடந்தோம்.

செய்தி : எம்.எஸ்.மதுக்குமார்

About ThagavalAdmin@123

Check Also

சிறுகதை

சிறு கதையை காண இங்கே கிளிக் செய்யவும் Share on: WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *