இருளில் மூழ்கி கிடக்கும் செந்துறை அரசு பொது மருத்துவமனை பாதையால் இரவில் சிகிச்சை பெற வருபவர்கள் அவதி.
அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு பொது மருத்துவ மனை வளாகத்தில் உள்ள தெரு விளக்குகள் மற்றும் உயர்கோபுர விளக்குகள் கடந்த சில மாதத்திற்கும் மேலாக எரியாமல் உள்ளதால் இரவில் வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.
போதிய மருத்துவர்கள் ஊழியர்கள் இல்லாமல் செயல்படும் இம்மருத்துவமனையில் இரவு நேரங்களில் முதலுதவி மற்றும் நோய் சிகிச்சை பெற வருபவர்கள் மின் விளக்குகளும் எரியாமல் உள்ளதால் தடுமாறி விழுவதோடு இருட்டில் விஷ ஜந்துக்கள் இருந்தாலும் தெரியாமல் மிதித்து விடும் அபாயமும் உள்ளது
சம்பந்தப்பட்ட துறைக்கு மின் விளகுகள் சரி செய்ய தொடர்ந்து வலியுறுத்தியும் இது வரை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உயிரை காக்க சேவை புரியும் மருத்துவ ஊழியர்களும் இரவில் உயிரை பணயம் வைத்துத்தான் இருண்ட பாதையை கடந்து செல்கின்றனர் சம்பந்தப்பட்ட துறையினர் உயர் கோபுர மற்றும் மருத்துவமனை பாதையில் உள்ள தெரு விளக்குகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்பாய் உள்ளது.
5 comments
Pingback: Sewer Line Repair Alpharetta GA
Pingback: brians club
Pingback: source
Pingback: psilocybin california
Pingback: situs togel online