அரியலூர் மாவட்டம் இலந்தைகூடம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், அரியலூர்,பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 450 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 150 வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
வடக்குவீதியில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலிலிருந்து முதலில் கோயில் காளையும், தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது, சீறிவந்த காளைகளை அடக்க முயன்ற மாந்துறை விக்னேஷ்தெரணி மணிகண்டன்உள்ளிட்ட15 பேர் காயமடைந்தனர். அதில் படுகாயமடைந்த கோவில்எசனை சின்னதுரைசெல்லப்பன்பேட்டைதர்மலிங்கம்.மேட்டுத்தெரு மணி ஆகியோர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் காளையை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத வீரர்களின் உரிமையாளர்களுக்கும் தங்கம்,வெள்ளிக்காசுகள், சைக்கிள், பீரோ, சேர், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுபொருட்கள் விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டது.