mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / இவரு…. வேற லெவல்

இவரு…. வேற லெவல்

இவரு…. வேற லெவல் என வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களில் ஒரு சிலர் தோன்றுவார்கள் அப்படி ஒருவர் தான் நாம் சந்தித்த வாகையூர் நெடுமாறன் திட்டக்குடி திருச்சி பிரதான சாலையில் அமைந்துள்ள அவரது தோட்டத்தில் செடிகளுக்கு நீர் விட்டுக்கொண்டிருந்தார்.

2000 காலகட்டத்தில் மளிகை கடை நடத்தியவர் பதினாறு வருடங்களாக தமது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்க துணிப்பை எடுத்துவந்தால். வாங்கும் பொருளின் விலையில் 5 சதவிகிதம் தள்ளுபடி செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். பிளாஸ்டிக் தீமைகளை மக்கள் சரிவர அறியாத காலத்திலேயே அதை பற்றிய விழிப்புணர்வு விதை தூவியவர்களில் நெடுமாறன் ஒருவர்.

மெல்ல பேச்சு கொடுத்தோம் எப்படி? தோணுச்சி இந்த தள்ளுபடி ஜடியா ?

17 வயதிலேயே வெளிநாடு போய்டேன் 28 வயதில் தான் ஊருக்கு திரும்பி வந்து மளிகை கடை வைத்தேன் அங்க இருக்கும் போது இங்க உள்ளவனும் மனுசன் தான் நம்ம நாட்டுலேயும் மனுசன் தான் ஒரு பக்கம் குப்பை போடுறதிலிருந்து சட்டத்தை மதிக்கிற வரைக்கும் சரியா இருக்காங்க. நம்ம ஆளுங்க தலைகீழா இருக்காங்கன்னு யோசனை வரும்.

அப்புறம் பிளாஸ்டிக் தீமை பற்றி அறியாமல் அதை ஆதரிக்கிறாங்களேன்னு ஆதங்கம் ரெண்டும் சேர்ந்து ஒருத்தரை மாற சொல்வதை விட மாற்றம் நம்மிடம் இருந்தே தொடங்கட்டும் என துணிப்பை கொண்டு வந்தா தள்ளுபடின்னு ஒரு திட்டம் அறிவிச்சேன் நல்ல வரவேற்பு.80 சதவிகிதம் மக்கள் ஆதரிச்சாங்க பதினாறு ஆண்டுகள் சிறப்பா போச்சி என நிறுத்தியவர்.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் தூக்கி எறியும் பிளாஸ்டிக் குப்பைகளை கூலிக்கு ஆள் வைத்து பொறுக்கி எடுத்து தூய்மை செய்யதோடு அதை தன் சொந்த இடத்தில் சேமித்து வந்தவருக்கு மலையாய் குவியும் குப்பைகளை அப்புறபடுத்துவற்க்கு அந்நாளில் அரசு அதிகாரிகள் எந்த உதவியும் செய்யவில்லை இவரது செயலை ஆதரிக்க எந்த முனைப்பும் காட்டவில்லை ஒரு கட்டத்தில் சொந்த செலவிலேயே தேங்கிய குப்பைகளை அகற்றியதோடு விவசாயபணிகளுக்காக மளிகை தொழிலையும் விட்டுவிட்டார்.

ஏன் ? மளிகை தொழிலை விட்டுவிட்டிங்க என்றால்

விவசாயம் பார்க்க போதிய நேரமில்லை என்பது தான் முதல் காரணம் அப்புறம் மளிகை தொழிலில் இருந்த போதே ஆசனம் ஆண்டியப்பன் அவர்களிடம் யோகா பயின்றேன். இந்த அற்புத கலையை எல்லாருக்கும் சொல்லிதரவேண்டும் என்ற ஆர்வம் இரண்டும் சேர்த்து என்னை மளிகையில் இருந்து மாற்றிவிட்டது. என்பவரிடம் சுற்று வட்டாரத்தில் இருந்து வந்து யோகா கற்று செல்கிறார்கள். நெடுமாறனின் சிஷ்யர்களில் ஒருவர் அவரது தகப்பனார் என்பதும் அவர் 86 வயதிலும் யோகாவை ஆர்வமாய் கற்று செய்து வருகிறார் என்பது கூடுதல் ஆச்சர்யம்.

தற்போது இயற்கை விவசாயம், கீரை வளர்ப்பு வேம்பு,புங்கன்,வேலம், நாட்டு கருவை ஆகிய மரகன்றுகள் என ஆர்வமாய் உருவாக்கி வருகிறார். எதை செய்தாலும் உடலுக்கோ, மண்ணுக்கோ கேடு விளைவிக்காத செயலை செய்யவேண்டும் என வலியுறுத்தும் நெடுமாறன்.

நாம் ஒரு உணவு எடுத்துக்கொள்கிறோம் அது செரிக்கவில்லை என்றால் வாந்தி அல்லது பேதியாய் மாறி விடுகிறது. அது போல் எல்லாவற்றையும் செரித்துக்கொள்ளும் பூமி பிளாஸ்டிக்கை ஏற்றுக் கொள்ள முடியாமல் நோய்வாய்பட்டு அவஸ்தைப்படுகிறது. இதனால் காற்று அசுத்தமடைகிறது, நிலம் மாசுபடுகிறது, நீர்நிலைகள் நச்சு தன்மையடைகிறது இத்தனையும் கெடுத்துட்டு நாம எப்படி வாழப்போறோம் ? என கேள்வி எழுப்புகிறார்.

விளம்பரம் தேடாமலே வேலையை பார்த்துக்கொண்டிருக்கும் நெடுமாறனிடம் விடைபெற்று திரும்பும் வழியில்…..

பள்ளி சிறுவன் ஒருவன் கையில் துணிப்பையோடு நம்மை கடந்தான் அவனை நிறுத்தி எங்கே தம்பி ? என கேட்டால் கடைக்கு போறேன்ணே…என சொன்னான். நெடுமாறன் போன்ற இயற்கை ஆர்வலர்களின் விதை முளைவிட தொடங்கியுள்ள மகிழ்வு நம் மனதில்…!

செய்தி: எம்.எஸ்.மதுக்குமார்

About ThagavalAdmin@123

Check Also

சிறுகதை

சிறு கதையை காண இங்கே கிளிக் செய்யவும் Share on: WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *