உடையார்பாளையம் முந்திரி காட்டில் சிலை கண்டெடுப்பு
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கைகளநாட்டார் வசிக்கும் ராஜேந்திரன் என்பவர் தனது முந்திரி கொல்லைக்கு முந்திரி கொட்டை எடுக்க சென்றுள்ளார்.
கொள்ளையில் உள்ள ஒரு முந்திரி மரத்தின் கீழ் மர்ம பொருள் கிடப்பதை கண்டு அருகில் சென்று பார்த்தபோது அது 2 அடி உயரம் கொண்ட சிலை ஒன்று கைகள் உடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது இதையடுத்து உடையார்பாளையம் போலீஸாருக்கு ராஜேந்திரன் தகவல் கொடுத்துள்ளார் . விரைந்து வந்த போலீஸார் சிலையை கைப்பற்றி உடையார்பாளையம் கோட்டாட்சியர்(பொ) வேல்முருகன் வசம் ஒப்படைத்தனர்.
அந்த சிலை உலோகமா அல்லது ஐம்பொன்னா ஆய்வு ஒருபுறமும் சிலை முந்திரிகாட்டுக்கு வந்தது எப்படி என கோட்டாட்சியர் மற்றும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்