உலக முட்டை தினத்தை முன்னிட்டு மாணவமாணவிகளுக்கான போட்டிகள் நடைபெற்றது
உலக முட்டை தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பசுமைப் படை சார்பில் மாணவ, ஓவியம் மற்றும் கவிதைப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் விஸ்வாவும்,ஆறாம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் ராணியும் வெற்றிப் பெற்றனர்.வெற்றிப் பெற்ற இவர்களுக்கு தலைமை ஆசிரியை வளர்மதி பரிசுகளை வழங்கினார். போட்டியின் நடுவர்களாக வேதா, கங்கா தேவி, கவிதா, ராஜராஜ சோழன், ராஜேஸ்வரி, பாரதி, துர்கா, ஆனந்த் ஆகியோர் செயல்பட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை பசுமைப் படை பொறுப்பாளர் சாந்தி,தீபக் ஆகியோர் செய்திருந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களின் படைப்புகள் மாநில அளவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.