எகிறியது எக் ரேட் தேவை அதிகரிப்பால் விலையேற்றம்.
தமிழக மற்றும் அண்டை மாநிலங்களுக்கான கோழி முட்டைக்கான தேவையை பூர்த்தி செய்வதில் முன்னிலை வகிக்கும் நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 42 காசுகள் உயர்ந்து ரூ.5.16 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டையின் தேவை அதிகரித்துள்ளதும்,தீவன விலை ஏற்றத்தாலும் இந்த விலை உயர்வுக்கு காரணம் என கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் கடந்த வாரம் 4.50 என இருந்த சில்லறை விலை அடுத்த சில தினங்களில் 5 ரூபாயாக ஏற்றம் பெற்று மாறி 5.50 தற்போது 6 ரூபாயாக ஆக சில்லறை விலையில் உயர்ந்து உள்ளது முட்டை விலை.