எதிர்பாரா வெவ்வேறு விபத்தில் 2 வயது குழந்தை உட்பட 2 பேர் பலி
.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி . ஜெயங்கொண்டம் – விருத்தாச்சலம் சாலையில் சைக்கிளில் கல்லாத்தூருக்கு சென்று போது , தத்தனூர் பொட்டக்கொல்லையை சேர்ந்த பெரியசாமி தனது இருசக்கர வாகனத்தில் உறவினரான காந்திமதியை பின்னால் அமர வைத்து செல்லும்போது போது, எதிர்பாராத விதமாக சைக்கிளில் மோதியதில்
3 பெரும் கீழேவிழுந்தனர் படுகாயமடைந்த காந்திமதி அதே இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அதே போல் மீன்சுருட்டி – காட்டுமன்னார்கோவில் செல்லும் சாலையில் ராமதேவநல்லூர் அருகே பாக்கியராஜ் தனது இருசக்கர வாகனத்தில் 2 வயது மகள் கவிநிலாவுடன் சென்ற போது இருசக்கரவாகனம் எதிர்பாராத விதமாக புளிய மரத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குழந்தை அதே இடத்திலேயே பலியானது. பாக்கியராஜ் மிகவும் மோசமான நிலையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.