mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / தகவல் தருகிறார்கள் / என்னப்பா இப்படி ஆயிடுச்சே என்றபடியே அமர்ந்த மச்சகாளையை பார்த்து ஏன்? உலகம் உருண்டை தட்டையா ஆயிடுச்சா என நக்கல் விட்ட மயிலகாளையிடம்

என்னப்பா இப்படி ஆயிடுச்சே என்றபடியே அமர்ந்த மச்சகாளையை பார்த்து ஏன்? உலகம் உருண்டை தட்டையா ஆயிடுச்சா என நக்கல் விட்ட மயிலகாளையிடம்

என்னப்பா இப்படி ஆயிடுச்சே என்றபடியே அமர்ந்த மச்சகாளையை பார்த்து
ஏன்? உலகம் உருண்டை தட்டையா ஆயிடுச்சா என நக்கல் விட்ட மயிலகாளையிடம்

அட அது இல்லப்பா சூப்பரு கட்சி ஆரம்பிக்க போறேன்னு சொன்னதும் அவரோட பட்டாளம் துள்ளி கெளம்புனாங்க . சூப்பருக்கு எதிராக கருத்து சொல்லி ஆளாளுக்கு சூட்ட கிளம்ப ரசிகர்களும் முடிஞ்ச வரை பத்திரிக்கை ஊடகம் வாயிலா பதில் போர் நடத்துனாங்க அங்க தான் வச்சாரு ட்விஸ்டு

என்னோட காவலர்கள் யாரும் யாருக்கும் பதில் சொல்ல வேணாம் அமைதியா இருங்கன்னு ஆர்டர் போட என்னடா போருன்னாரு இப்ப பொங்காதேன்னு சொல்றாருன்னு தவிக்கிறாங்க

இவங்க பரவாயில்ல பேசமுடியாம தவிக்கிறாங்க ஆளும்கட்சியில சிலரு பாக்கமுடியாம புழுவா துடிக்கிறாங்களாம் என்ற ஆடுமுட்டி தொடர்ந்து சொன்னது
குக்கர் அண்ணனை எப்படியும் தொகுதி உறுப்பினராக. ஜெயிக்க விடமாட்டோம்முன்னு கங்கணம் கட்டுனவுங்க முன்னாடி. ஒத்த ஆளா ஜம்முன்னு சபையில் உட்கார அவரை பாக்க முடியாம நெளியிறாங்க என்ன தான் இருந்தாலும் முன்னால் தலைமையல்லவா

ஆடு நீ தலைமைன்னு சொன்னதும் எனக்கு இன்னொரு தலைமை ஞாபகம் வருது அரியலூர் மாவட்டத்தை நிர்வாகிக்கும் தலைமைக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட அவுங்க அரசு மருத்துவமனையிலேயே அட்மிட் ஆனதோட அங்கேயே ஆபரேஷனும் செஞ்சிகிட்டாங்க இதனால் தனியார் மருத்துவமனை மவுசு குறைஞ்சதோட ஏழை பாழைகள் நம்பி இருக்க அரசு மருத்துவமனைகள் பற்றிய மவுசு உயர்ந்திருக்காம் இப்ப பொதுமக்கள் மத்தியில ஒடுற பேச்சு மகராசி நல்லாயிருக்கனும் அவுங்க தான் அரசு மருத்துவ மனைகளை மாவட்டம் முழுவதும் தூக்கி நிறுத்தி இருக்கான்னு ஆணி தரமா பொதுமக்கள் நம்புறாங்க என்றார் மயிலகாளை

இதை கேளு இது பொலிட்டிஷியனோட நம்பிக்கை என மயிலகாளை சொன்னது ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்னே திருவண்ணாமலை மூக்குபொடி சாமிகிட்ட உட்கார்ந்து வந்தவரு ஜெயிச்ச பின்னாடியும் மறக்காம ஆசி வாங்க போனாரு அந்த சின்ன டீகடையில இவரு பவ்யமா அமர்ந்திருந்த காட்சி பார்த்து மக்கள் மலைச்சி போறாங்க சாமி ஆசி எப்பவும் எனக்கு உண்டு என்று சொல்ல புறப்பட்ட அரசியல் தலைவர் மனதில் சாமியாருக்கு ஆஸ்ரமம் கட்ட ஆலோசனை ஒடுவதாக திருவண்ணாமலை முழுதும் பேச்சு இருக்கு

பேச்சோட மறக்காம இதை கேளுங்க என்ற கசாப்பு பெரம்பலூரில் இருந்து தஞ்சாவூருக்கு போற தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடந்து முடிஞ்சிட்டதா சொல்லி பெரம்பலூர் அருகே உள ள பேரளிகிராம எல்லையில் டோல்பூத் வேலை நடக்குது இதில் என்ன உள்குத்துன்னா அரியலூர் எல்லையில் இருக்கும் ஏழு கிலோமீட்டர் புறவழிசாலையில் எந்த வேலையும் செய்யாம பழைய ரோட்டை வச்சிகிட்டு எப்படி டோல்பூத் அமைக்கலாம் என சமூக ஆர்வலர்கள் மத்தியிலே பேச்சு ஒடுது விரைவில் யாராவது பொதுநல வழக்கு போட்டாலும் ஆச்சர்யமில்லை

என்றபடியே சரிப்பா டவுனுக்கு போறேன் பொங்க சாமான் வாங்க எழுந்த கசாப்பை பார்த்து வணக்கம் போட்டபடி நடந்தார்கள் மயிலகாளை,மச்சகாளை,ஆடுமுட்டி

About ThagavalAdmin@123

Leave a Reply

Your email address will not be published.