எம்.ஆர்.கல்லூரியில் சர்வதேச மக்களாட்சி தின கருத்தரங்கம்
அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனத்தில் சர்வதேச மக்களாட்சி தின கருத்தரங்கம் நடைபெற்றது
”மக்களுக்காக மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி” எனும் தலைப்பில் .நடந்த நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஆர்.இரகுநாதன் தலைமை தாங்கி கருத்தரங்கை துவங்கி வைத்தார். இயக்குநர் முனைவர் R.இராஜமாணிக்கம், ஆலோசகர் முனைவர் தங்க.பிச்சையப்பா, இணைச்செயலர் எம்.ஆர்.கமல்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் பேராசிரியர்கள் பேசியதாவது ”மக்களாட்சி, மக்களாட்சியின் பயன்கள், தேர்தல் முறைகள், சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதிகளின் பணிகள் குறித்தும் பழங்காலத்தில் புறநானூற்றுப் பாடல் வாயிலாக குடவோலை முறை மூலம் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்த செய்திகளையும், மக்களாட்சி அதிகாரம் அரசாங்க அமைப்பு, மக்களாட்சியினால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்தும் தற்கால மக்களாட்சியில் மக்கள் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள், அடிப்படைக்கடமைகள், உரிமைகள் ஆகியவற்றைப் பற்றிய செய்திகளை மாணவர்களுக்கு புரியும் விதமாக பயனுடையக் கருத்துக்களையும், மேற்கோள்களையும் சுட்டிக்காட்டி பேராசிரியர்கள் தட்சணாமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, மரியகிருஸ்துராஜ், குருநாதன், கலைப்பொன்னி ஆகியோர் விளக்கி உரையாற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைத்தலைவர் சாமிநாதன், உதவிப்பேராசிரியர் சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.