mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / தகவல் தருகிறார்கள் / எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றபடியே ஆலமரத்தடியில் அமர வந்த மச்சகாளையை பார்த்து

எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றபடியே ஆலமரத்தடியில் அமர வந்த மச்சகாளையை பார்த்து

எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றபடியே ஆலமரத்தடியில் அமர வந்த மச்சகாளையை பார்த்து

ஆமா  இவரு பெரிய  பிரிட்டிஸ்  இளவரசரு என்று  நக்கலடித்த மயிலகாளையிடம்  ஒருத்தரை.  வஞ்சாதாங்க தப்பு   வாழ்த்துறதுல என்ன தப்புன்னு   கேட்டார்  மச்சகாளை

அட விடுங்கப்பா என்ற ஆடுமுட்டி

தேரை இழுத்து தெருவுல விட்டுட்டாங்க அவரை வாங்க வாங்கன்னு இருபது வருஷமா  கூப்பிட்டு ஒய்ந்து போன நேரத்துல ரசிகர்களுக்கு போட்டோ எடுக்குற வைபவம் வரம் போல   அமைஞ்சுது  கிடா விருந்து கொடுக்க ஆசைன்னு சொன்னவரு கூடவே

அரசியல் பிரவேசத்தையும், அரசியல் மாற்றத்தையும்  சொன்ன உடனே புல்லரிச்சி போன ரசிகர்கள்

  புள்ள குட்டின்னு வந்த பிறகு வாலிப முறுக்கோட செயல்படமுடியுமான்னு ஒரு சிலரும்   ஏம்ப்பா  இத்தனை வயசுலேயும் சினிமாவுல தலைவரு  எவ்வளவு கெத்தா  சண்டை போடுறாரு.  நம்மளாட்டி மட்டும்  முடியாதான்னு பலரும் விவாதிக்கிறாங்க இந்த புதுவருடத்திலிருந்து அவரு  எங்க எப்போ எப்படி வழிகாட்டப்போறாருன்னு ரசிகர்கள்  மட்டுமல்லாமல்  மக்களும் ஆவலாய் எதிர்பார்த்து  இருக்காங்க என்ற ஆடுமுட்டியிடம்

இவரு கிடா விருந்து ஆசையை சொல்லி இருக்காரு
அங்க ஒருத்தரு சைவ விருந்து கொடுத்து அசத்தி இருக்காரு என்ற மச்சகாளையை ஆவலுடன் அனைவரும் பார்க்க
2 ஜி வழக்கு வெற்றிக்கு  பின்பு   திருச்சி வந்து இறங்கின முன்னாள் மத்திய அமைச்சருக்கு  அதிர்வேட்டு முழங்க தாரைதப்பட்டைன்னு போட்டு அசத்தி சொந்த மாவட்டத்துக்கு அழைச்சிகிட்டு போனங்க வழிநெடுக்க டிராபிக் ஜாம்ன்னா பாத்துக்கோங்க  மேலும் பெரம்பலூரில்   முக்கியஸ்தர்களுக்கும்  தொண்டர்களுக்கும்   தலை வாழை இலையோட வடை பாயாச சாப்பாடு போட்டு  மனம் குளிர வச்சாங்க

மேலும் பக்கத்து மாவட்டமான அரியலூர்  சென்றவருக்கு   மாவட்டம்   தந்த  சிறப்பு வரவேற்பை ஏத்துக்கிட்டு   தனது அரசியல் வழிகாட்டியும், திமுக முன்னோடியுமான  ஆண்டிமடத்தாரை பார்த்து ஆசிவாங்க போனாரு அங்கு பாச உணர்வில்  இருவரும் பொங்கிட்டாங்களாம்

முக்கிய நிகழ்வு ரெண்டு வருட கடைசி நாள்ல நடக்க  தீபாவளிக்கு சமமா பட்டாசு விற்பனை நடந்திருக்கும் என மச்சகாளை கூற

நீ. பொங்குனாங்கன்னு   சொன்னதும்  எனக்கு அரியலூர்   பக்கத்துல உள்ள தாமரைகுளம் தான் ஞாபகத்துக்கு வருது பெயருக்கேத்தா. மாதிரி தாமரை மலரோட பூத்து குலுங்கிய தடாகம் எப்பவுமே பொங்கி வழியும்   அந்த  அழகை  சாலை  வழியா போறவங்க பாத்து ரசிச்ச காலமெல்லாம் பழசுங்க  ஏரிவரத்தோட. ரெண்டு பக்கமும்   இடைஞ்சல் ஆனதுல இப்ப தாமரைகுளம் தண்ணியில்லாம தலைவிரிகோலமா காட்சி தருது  ஆளும்கட்சி அதிகார மையமா இருக்கிற முக்கியஸ்தரோட சொந்த ஊரு   என்று எழுபது வயது பெரியவரு பஸ்சுல புலம்பியபடியே பெருமூச்சி விட்டாருப்பா  என்றார்  மயிலகாளை

ஏம்ப்பா வெவரம் தெரியாம பேசாத அரியலூரு எப்பவும் வறட்சி மாவட்டமுன்னு தெரியாதா ?   என்ற ஆடுமுட்டியிடம்

அய்யா இந்த ஆண்டு மாவட்ட அளவில்  பெய்த மழையின் அளவு மட்டும்  ஆயிரத்தி நூத்தி சொச்சம் மில்லி மீட்டர்  அப்படின்னு  புள்ளி விவரம் சொல்லுது  இதுல  கொஞ்சமாவது அந்த ஊரு பக்கம் பெய்து இருக்காதா என மடக்கினார் மயிலகாளை

சரி சரி என சமாதானம் செய்த படியே

  இந்த பி.டி பருத்தி இருக்கே அதை நம்பி பணத்தையும் உயிரையும் விவசாயிங்க விடுறாங்க அதனால் அதை தடைசெஞ்சு விவசாயிகளை காப்பாத்துங்கன்னு இயற்கை வேளாண்விவசாயிகள் குரல் அதிகமாகி உள்ளது அவுங்க என்ன கேட்குறாங்கன்னா உயிரை  பாதிக்கிற அளவுக்கு மருந்து பவர் இருக்குறப்ப. இந்த பருத்தியில தயாரிக்கிற துணி மட்டும் உடம்பை கெடுக்காதா ? என லாஜிக்க கேட்குறாங்க  இது குறித்து அதிகாரிங்க கிட்டே நம்மாளு ஒருத்தரு கேட்டப்ப  மௌனமா சிரிச்சிகிட்டே நழுவிட்டாரு என சொன்ன ஆடுமுட்டியிடம்

இதோ பாருங்கைய்யா ஆலமரத்துல சும்மா வெட்டிய பேசுறத விட்டுட்டு வேலையை பாருங்க என்றார் அந்த வழியே வந்த கசாப்பு

இங்க…பார்ரா…. சும்மா பேசுனா தப்பில்ல சும்மா, சும்மா பேசுனாத்தான் தப்பு என்றபடியே  சிரிக்க  உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி என பாடியபடியே நடந்தார் கசாப்பு.

Attachments area

About ThagavalAdmin@123

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *