ஏரிகளை மீட்கும் விதமாக கலாம் நண்பர் குழு இளைஞர்கள் பனை விதைகள் நடவு செய்தனர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள விளாகம் கிராமத்தை சுற்றி உள்ள காரிஏரி. அய்யாவு ஏரி நாட்டார் குளம் சின்னகுட்டை உள்ளிட்ட 12 ஏரிகளில் 10,000 பனை விதைகள் நட இலக்கு நிர்ணயித்துள்ள கலாம் குழு இளைஞர்கள் இது வரை நான்கு ஏரிகளில்கடந்த நான்கு ஆண்டுகளாக 4000 விதைகள் நடவு செய்துள்ளனர் இதன் அடுத்த கட்டமாக .நேற்று காலை விளாகத்தில் இருக்கும் அய்யாவு உடையார் ஏரியில் 1000 விதைகளை நட்டனர்
இது குறித்து கலாம் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வீரக்குமார் கூறியது பனிரெண்டு ஏரிகளில் மீதமுள்ள ஏழு ஏரி குளங்களிலும் பனை விதைகள் மழைக்காலத்திற்கு முன்பு விதைகளை நடவு செய்ய முயற்சி செய்து வருகின்றோம் மொத்தம் 10,000 பனைமரங்களை உருவாக்குவதே எங்கள் லட்சியம் என்றார் இந்நிகழ்ச்சியில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முக சுந்தரம் கலந்து கொண்டு இளைஞர்களை ஊக்கப்படுத்தினார். கலாம் நண்பர்கள் குழு இளைஞர்களின் செயல் சுற்றுவட்டார மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது
2 comments
Pingback: Hawaiian Magic Mushrooms
Pingback: yehyeh