mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / ஏர்கலப்பை எங்கள் சாமி விவசாயம் எங்கள் கோவில் தை மாதம் நடந்த தமிழர் திருமணம்

ஏர்கலப்பை எங்கள் சாமி விவசாயம் எங்கள் கோவில் தை மாதம் நடந்த தமிழர் திருமணம்

ஏர்கலப்பை எங்கள் சாமி விவசாயம் எங்கள் கோவில் தை மாதம் நடந்த தமிழர் திருமணம்

     செந்துறை அருகே உள்ள குவாகம் கிராமத்தில் யாகம் வளர்காமல் தங்களை வாழ வைத்த ஏர்கலைப்பையை சாட்சியாக வைத்து ஏர்கலப்பையின் முன் உறுதிமொழி ஏற்று திருமணம் நடந்தது.குவாகம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் அன்பரசன்என்பவருக்கும், கீழமாளிகைகிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரதுமகள் துர்காதேவிக்கும்  திருமணம் நிச்சயிக்கப்பட்ட

 திருமணத்தில் வழக்கமான முறையில் இல்லாமல்  சடங்கு சம்பிரதாயங்கள் இல்லாது  விவசாயத்தினை காப்போம் என்ற முறையில்  மாலையிட்டு , பூவும் பொட்டுவைத்து  ஏர்கலப்பையின் முன்  திருமண தம்பதியினர் அதனை சுற்றி வந்துஉறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும், திருமண தம்பதியினருக்கு ஆட்டுக்குட்டி ஒன்றையும் பரிசாக அளித்து ஆடுப்பட்டி பெருகுவது போல மணமக்களின் வாழ்வு  வேண்டுமென அனைவரும் வாழ்த்தினர்

இந்த திருமணம் பற்றி மணமகன் மற்றும் மணமகள் கூறுகையில்  இன்றைய காலகட்டத்தில் விவசாயத்திற்கும் விவசாயிக்கும் முன்னுரிமை வேண்டும் என   இன்றுவழக்கமான திருமணமாக இல்லாது ஏர்கலப்பையை முன்னிலையாக வைத்து திருமணத்தை முடித்தோம். எங்களது குடும்பமும் விவசாயத்தைபின்பற்றியே வந்துகொண்டிருக்கின்றோம் இனி இதுபோன்ற திருமணங்கள் எங்கள் குடும்பத்தை தாண்டி அனைவரிடமும் உருவாக வேண்டுமென கூறினர்.

இந்த திருமணம் ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது  இந்த திருமணத்தில் உறவினர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டதோடு ஏர்கலப்பையை சரியாக வணங்கும் மணமக்களை வாயார  வாழ்த்தினார்கள்

About ThagavalAdmin@123

Check Also

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமினை ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *