mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / கண்கொள்ளா காட்சி கல்லங்குறிச்சி கலியுக வரதராசப்பெருமாள் கோயில் தேரோட்டம்

கண்கொள்ளா காட்சி கல்லங்குறிச்சி கலியுக வரதராசப்பெருமாள் கோயில் தேரோட்டம்

கண்கொள்ளா காட்சி கல்லங்குறிச்சி கலியுக வரதராசப்பெருமாள் கோயில் தேரோட்டம்

வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்த பெற்ற தலமாகவும், 17-ம் நூண்றாண்டு கட்டப்பட்ட தென்கலை அமைப்பை சேர்ந்ததுமான அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி வரதாராசப் பெருமாள் திருவிழா ஸ்ரீராமநவமி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் பெருந்திருவிழாவாக நடைபெற்று வருவது வழக்கம் .

ராமநவமி நாளான மார்ச்.25-ம் தேதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவர் கலியுக வரதராசப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பெருமாள் தன் தேவியர்களுடன் சூரிய வாகனம், வெள்ளிபல்லக்கு, சிம்ம வாகனம், புன்னை மர வாகனம், சேஷ வாகனம், உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். கடந்த 31-ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. பெரிய தேரில் வரதராசப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளினார். சிறு தேரில் ஆஞ்சநேயர் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் அரசு கொறாடா தாமரை .ராஜேந்திரன் வடம் பிடித்து துவக்கி வைக்க வீதிஉலா சென்று மீண்டும் கோவில் நிலை வந்தடைந்தது

விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்க வேண்டி, தங்கள் வயலில் விளைந்த நெல், கம்பு, சோளம் உள்ளிட்ட தானியங்களை விவசாயிகள் காணிக்கையாக அளித்தனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை, ஆதீன பரம்பரை தருமகர்த்தா கோ.கோவிந்தசாமி படையாச்சியார் குடும்பத்தினர் மற்றும் கல்லங்குறிச்சி பொதுமக்கள் செய்திருந்தனர். இவ்வி
இவ்விழாவில் சுற்றுவட்டார மாவட்ட மாநில பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

About ThagavalAdmin@123

Check Also

புதிய குடிநீர் தொட்டி திமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் திறப்புவிழா நடைபெற்றது.

புதிய குடிநீர் தொட்டி திமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் திறப்புவிழா நடைபெற்றது.   செந்துறை ஒன்றியம் மணக்குடையான் ஊராட்சிக்கு உட்பட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *