அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்வி துறை சார்பில் தமிழக அரசால் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட இல.செங்குட்டுவன், வி.எமல்டாகுயின்மேரி,மு.மணிகண் டன்,ஜெ.உஷா, ம.குணபாலினி ஆகியோரை மாவட்ட ஆட்சியர் எம். விஜயலெட்சுமி பாராட்டி கௌரவித்தார்.
அஸ்தினாபுரம் மாதிரி பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் 419 பேரையும் நூலக உறுப்பினராக மாற்றி வாசிப்பு திறனை மேம்படுத்த செய்த அப்பள்ளி தலைமையாசிரியரை பாராட்டி கௌரவித்த ஆட்சியர் புதுப்பள்ளி விருதுக்கு ஜெ.சுத்தமல்லி மற்றும் சோழன்குடிக்காடு அரசு மேல்நிலைபள்ளிகளுக்கு வாழ்த்தும் தெரிவித்தார் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் , துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்