கலைஞர் மறைவு அரியலூர் மாவட்டம் முழுவதும் அடைப்பு
திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி நேற்று முன்தினம் உயிரிழந்ததையடுத்து, அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
மாவட்டம் முழுவதும் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.அமைதி பேரணி மொட்டை அடிப்பு என ஆண்களும் ஒப்பாரி பாடி பெண்களும் அஞ்சலி செலுத்தினார்கள்
மேலும், அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர், தா.பழூர் மற்றும் அனைத்து கிராமங்களிலும் கருணாநிதியின் உருவப்படம் வைத்து திமுகவினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.