கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்த பெற்ற தலமான கல்லங்குறிச்சி வரதாராசப் பெருமாள் கோயில் திருவிழா ஸ்ரீராமநவமி அன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் பெருந்திருவிழாவாக நடைபெறும்
ஸ்ரீராமநவமி நாளான நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. கோயில் ஆதீன பரம்பரை தர்மகர்த்தா கோவிந்தசாமி படையாட்சியார் குடும்பத்தினர் முன்னிலையில் உற்சவர் ஸ்ரீகலியுக வரதராசப் பெருமாள் மற்றும் தாயார் ஸ்ரீதேவி பூதேவி ஆகிய சுவாமிகள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து இரவு சூரிய வாகனத்தில் சுவாமி உலா வந்தது.
வரும் 30-ம் தேதி வரை பல்வேறு வாகனத்திலும் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 31-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறுகிறது. 4-ம் தேதி மஞ்சள் நீர் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் திருவிழா நிறைவடைகிறது.
திருவிழாவில் அரியலூர் பெரம்பலூர் தஞ்சாவூர்சே லம் கடலூர் புதுக்கோட்டை மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து வரதராசப் பெருமாளை தரிசிக்க வரலாம் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை ஆதீனபரம்பரை தர்மகர்த்தா கோவிந்தசாமி குடும்பத்தினர் மற்றும் இந்து அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர். மேலும் அரசு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன .