காஞ்சிபுரம் மாவட்ட குத்துச்சண்டை சங்கம் துவக்க விழாவில் மதிமுக மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பங்கேற்பு
காஞ்சிபுரம் மாவட்ட குத்துச்சண்டை சங்க துவக்க விழா செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் மாவட்ட தலைவர் மணி தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட குத்துச்சண்டை சங்கத்தின் செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த சங்கத்தின் சார்பாக கோடைகால பயிற்சி வகுப்புகள் இன்று துவங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. இதில் பேசிய மல்லை சத்யா, குத்துச்சண்டையை மாணவர்கள் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் எனவும், தங்களது தற்காப்பிற்காக மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இதன் மூலம் அதிகம் கோபம் வருவதை தவிர்க்க முடியும் என பேசினார். மேலும் இந்த கோடை விடுமுறையை மாணவர்கள் வீணடிக்காமல் பயனுள்ள வகையில் குத்துச்சண்டை போன்றவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட குத்துச்சண்டை சங்கத்தின் உறுப்பினர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.