அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள வீராக்கன் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி அதிமுக கட்சிகாரர் இவரது மகள் வாசுகி நிறைமாத கர்பிணியாக இருந்து வந்தார் வாசுகியின் கணவர் கடலூர் மாவட்டம், நந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் கேரளாவில் வேலைக்கு சென்ற இடத்தில் கொரோனா ஊரடங்கினால் சிக்கி கொண்டார் வேலையில்லாததால் வருமானமும் இல்லை.
இந்நிலையில் தாய் வீட்டில் இருந்த வாசுகிக்கு மருத்துவ உதவி மற்றும் பொருளாதார நெருக்கடி என்பதை அறிந்த குன்னம் சட்டமன்ற உறுப்பினரும் பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ஆர்.டி. ராமசந்திரன் தனது சொந்த பணம் ரூபாய் பத்தாயிரத்தை தெற்கு ஒன்றிய செயலாளர் உதயம் ரமேஷ் மூலம் கொடுத்து உதவியதோடு மருத்துவ உதவிகளும் செய்து தர ஏற்பாடு செய்தார். இந்நிலையில் வாசுகிக்கு ஆண் குழந்தை பிறந்து தாயும் சேயும் நலமோடு உள்ளனர். நெருக்கடியான காலத்தில் அதிமுக எம் எல் ஏ செய்த மனிதநேயம் மிக்க உதவி பல்வேறு தரப்பினரின் பாராட்டை்பெற்றுள்ளது.