காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கண் சிகிச்சை முகாம்
அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபினவ்குமார் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி மோகன்தாஸ் வழிகாட்டுதலின் படி இன்று 27/11/17 திங்கள் அன்று காவல்துறை – திருச்சி அகர்வால் கண்மருத்துவமனை இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம் நடைப்பெற்றது.
முன்னதாக செந்துறை காவல் நிலைய ஆய்வாளர் கருணாநிதி முகாமை துவக்கிவைத்தார். முகாமில் ஏராளமான பொதுமக்கள்,போலீசார் கண்பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனை பெற்றவர்களுக்கு உரிய ஆலோசனைகளை அகர்வால் கண் மருத்துவமனை பரிசோதகர்களால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை காவல் உதவி ஆய்வாளர் பிரகஸ்பதி உள்ளிட்ட காவலர்கள் செய்திருந்தனர்.