mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / செய்திகள் / காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில்இரட்டை வேடம்போடும் அதிமுக திருச்சி சிவா சாடல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில்இரட்டை வேடம்போடும் அதிமுக திருச்சி சிவா சாடல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில்இரட்டை வேடம்போடும் அதிமுக திருச்சி சிவா சாடல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அதிமுக அரசு இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறது என திமுக எம்.பி திருச்சி சிவா குற்றம்சாட்டி பேசினார்.

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் எழுச்சிநாள் பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் க .சொ .க . கண்ணன் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர்,முன்னிலையில் நடைப்பெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்டு திருச்சி திமுக எம்.பி., சிவா பேசியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு கபட நாடகமாடுகிறது. இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றும் வேளையில் இறங்கியுள்ளது. தற்போது உண்ணாவிரத போராட்டம் நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது. அதிமுக அரசு துணிவிருந்தால், எதிர்கட்சிகளின் துணையோடு மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரலாம். அதிமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. இதனை மக்கள் ஏற்கமாட்டார்கள், ஏமாறவும் மாட்டார்கள்.

நாடாள வேண்டும் என்றால், அதற்கு ஒரு தகுதி வேண்டும். நடிகர்கள் அரசியலுக்கு வருவது தவறில்லை. ஆனால், ஆட்சி செய்வதற்கு தகுதி இருக்கிறதா என சிந்தித்து அரசியல் களத்தில் இறங்க வேண்டும். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய மூவரும் இல்லை என்றால், தமிழர்கள் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கும். இன்று நாம் நடப்பது, பேசுவது, சுதந்திரமாக செல்கிறோம் என்றால் இந்த மூன்று அறிஞர்கள் செய்த தியாகங்களும், போராட்டங்களும், தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் ஏற்பட்ட பற்றே காரணமாகும்.

அடுத்த சில ஆண்டுகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படப்போவதாக செய்திகள் வருகின்றன. அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அரசு என்ன திட்டங்களை செய்துள்ளது என்றால் ஒன்றும் இல்லை. நாம் காவிரி நீர் பெறுவதற்கே பல போராட்டங்களை நடத்தியும் இதுவரை எந்த ஒரு தீர்வும் ஏற்படவில்லை. மத்திய அரசும், அதிமுக அரசும் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. பாஜகவின் எடுபிடியாக அதிமுக அரசு உள்ளது. அப்படி இருக்கையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுக அரசால் என்ன செய்து விட முடியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் போராடி வருகிறார்கள். தமிழகத்தில் விவசாயம் நிறைந்த டெல்டா பகுதி மாவட்டங்கள் காவிரி நீரை பயன்படுத்தியே விவசாயம் செய்து வருகின்றன.

வாரியம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள், எதிர்கட்சி வரிசையில் திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் ஒன்றினைந்து போராடி வருகின்றனர். நீதிமன்றம் 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் உத்தரவிட்டது. ஆனால் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு எதைப்பற்றியுமே கண்டு கொள்ளவில்லை. தமிழக மக்கள் நலன் சார்ந்த எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மோடி அரசு முன்வரவில்லை. மாறாக மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்ககூடிய திட்டங்களை செயல்படுத்துவதில் அதிக அக்கறை எடுத்து கொள்கிறது. இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதல் மவுனம் காத்து வந்த அதிமுக அரசு, இன்று மக்களை ஏமாற்ற உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள்.

திமுக ஆட்சிக்காலத்தில் கடல் நீரை சுத்திகரித்து, சென்னை, ராமேஸ்வரம் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீரை தந்தது. திமுக எம்பியாக இருந்து நாடாளுமன்றத்தில் மக்கள் தேவைகளை எடுத்துறைத்து பல திட்டங்கள் நிறைவேற்ற குரல் கொடுத்துள்ளேன். அதற்குரிய தீர்வுகளும் கிடைத்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. தமிழக நலன் காப்பதில் திமுகவிற்கு மட்டுமே அக்கறை உண்டு, வேறு எந்த கட்சிகளுக்கும் இல்லை.

நிரவ்மோடி உள்ளிட்டவர்கள் பல கோடிகள் கடன் பெற்று வெளிநாட்டிற்கு ஓடிவிடுவர். அவர்களை யெல்லாம் மோடி விட்டுவிடுவார். ஆனால், இங்கு ஒரு மாணவர் கல்வி கடன்பெற போராட வேண்டி இருக்கிறது. பல அவமானங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. பாஜக அரசு இங்கு கால்ஊன்ற முடியாத நிலை இருப்பதால், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. பாஜக வினால் தமிழகத்தில் ஒரு காலத்திலும் கால் ஊன்ற முடியாது என்றார்.

கூட்டத்தில் , மாநில இளைஞரணி இணை செயலாளர் சுபாசந்திரசேகர், கழக கொள்கைபரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி, ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் தனசேகர், முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை தெய்வ இளையராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

About ThagavalAdmin@123

Check Also

புதிய குடிநீர் தொட்டி திமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் திறப்புவிழா நடைபெற்றது.

புதிய குடிநீர் தொட்டி திமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் திறப்புவிழா நடைபெற்றது.   செந்துறை ஒன்றியம் மணக்குடையான் ஊராட்சிக்கு உட்பட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *